ஷேர் மார்க்கெட் = குரங்கு கதை??


கையில் கொஞ்சம் பணம் சேர்ந்து விட்டால் நம்மவர்களுக்கு உள்ளங்கை அரிக்கத்தொடங்கி விடும்…..அடியேனுக்கும் அப்படி அரிக்கவே பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம் என்று முடிவு செய்து ஒரு பிரபலமான பங்குத்தரகு நிறுவனத்தை நாடியபோது Demat account, Hike, Slow down அது  இது என ஆங்கிலத்தில் நான் இது வரை அறியாதவற்றை எல்லாம் கூறி எப்படியோ முதலீடு செய்யும் எண்ணத்தை எனக்கு உருவாக்கி விட்டனர்….

எனது பங்குச்சந்தை ஆசையை நண்பர் ஒருவரிடம் பகிர்ந்துகொண்டபோது என்னை ஏற இறங்க பார்த்த அந்த நண்பர் “ஒரு குட்டிக்கதை சொல்கிறேன், அதைக் கேட்டுவிட்டு பின் ஒரு முடிவுக்கு வா” என்றார்….

ஆங்கிலத்தில் அவர் சொன்ன கதையை நம்ம பாட்டி ஸ்டைலில் மொழிபெயர்த்திருக்கிறேன்…

அந்தக்கதை…… 🙂

ஒரு ஊரிலே ஒரு பெரிய வியாபாரி வந்து தங்கி இருந்தாரு. அவர் ஒரு நாளு அந்த ஊருல இருக்குற எல்லார் கிட்டேயும் ஒரு அறிவிப்பு செஞ்சாரு.அதாவது அவர் குரங்கு வியாபாரம் பண்ணப்போறதாவும் ஊருல இருக்குற எல்லாரும் அவர் கிட்டேகுரங்கு பிடுச்சு குடுக்கலாம்னும், அப்படி குடுக்கற ஒவ்வொரு குரங்குக்கும் அவர் 10 ரூபாய் குடுக்கறதாகவும் சொன்னாரு..


இத கேட்ட ஊரு மக்கள், அவங்களால முடிஞ்ச அளவுக்கு காட்டுல போய் குரங்குபுடுச்சி இந்த வியாபாரி கிட்டே குடுத்து காசு வாங்கிகிட்டாங்க. கிட்ட தட்டஒரு வாரம் ஆச்சு.. எல்லாருக்கும் குரங்கு பிடிக்கறதுல நாட்டம் குறைஞ்சிபோச்சு..

இப்ப அந்த வியாபாரி, ஒவ்வொரு குரங்குக்கும் 20 ரூபாய் குடுக்கறதா சொன்னாரு… உடனே எல்லாருக்கும் ஆர்வம் வந்து திருப்பியும் காட்டுக்கு போய் முடிஞ்ச அளவு குரங்கு பிடிச்சு அந்த வியாபாரி கிட்டே குடுத்து பணம் வாங்கிகிட்டாங்களாம் .


இப்படியே ரெண்டு வாரம் போச்சு.. ஊருல ஒருகுரங்கு கூட இல்ல.. காட்டுலேயும் ஒரு குரங்கு கூட இல்ல.. எல்லாம் அந்த வியாபாரி கிட்டே தான் இருந்துச்சு.. இப்போ அந்த வியாபாரி சொன்னாராம்..நான் ஊருக்கு போயிட்டு வரேன்.. வரும் பொது இன்னும் நிறைய குரங்கு பிடிச்சு குடுங்க.. அப்படி பிடிக்கற குரங்குக்கு.. இந்த வாட்டி 50 ரூபாய் குடுக்கறேன்னு… நான் வர வரைக்கும்  இந்த பிடிச்ச குரங்க எல்லாம் பாத்துக்க என்னோட P.A. வை விட்டுட்டு போறேன்னு சொன்னாராம்.


மக்களுக்குஎல்லாம் அப்படியே Tension ஆயிடுச்சு.. என்னடா இது இப்போ ஊருலேயும் ஒரு குரங்குகூட இல்ல… காட்டுலேயும் ஒரு குரங்கு கூட இல்ல..

இப்ப பாத்து இந்த வியாபாரி 50 ரூபாய் குடுக்கறேன்னு சொல்லறாரே… என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டு இருந்தாங்களாம்..அப்போ பாத்து அந்த வியாபாரியோட P.A வந்து ஊரு மக்கள் கிட்டே சொன்னாராம்.. இங்க பாருங்க..

உங்களுக்கோ பிடிக்க குரங்கு இல்ல.. இங்க நீங்க பிடிச்சு வெச்ச குரங்கு எல்லாம் பத்திரமா என்கிட்டதான் இருக்கு.. என் முதலாளி வர்ரதுக்குள்ள இந்த குரங்கை எல்லாம் 35 ரூபாய்க்கு வாங்கிக்கோங்க.. அவர் வந்தவுடனே இதை எல்லாம் 50 ரூபாய்க்கு  வித்துடுங்கன்னு சொன்னாராம்..


திருப்பியும்… ஊர் மக்கள் எல்லாம்  அவங்க பிடிச்சு குடுத்த குரங்கையே 35 ரூபாய்க்கு வாங்கினாங்களாம்.. சரி நமக்கு எதுவும் நஷ்டம் இல்லையே.. எப்படியும் அந்த முதலாளி வந்த வுடனே  இதை எல்லாம் 50 ரூபாய்க்கு வித்துடலாம்என்ற எண்ணத்தோட…

இப்போ ஊருக்கு போன முதலாளியும் திரும்ப வரல.. அவரோட P.A. வும் எஸ்கேப்பு….

ஊரு full – ஆ இப்போ குரங்கா தான் இருக்கு…


விளங்கிட்டுதா ஷேர் மார்க்கெட் பிஸ்சினஸ்….ஏதாவது டவுட் இருந்தா தயங்காமா கேளுங்கோ 🙂


இந்தக்கதை முக்கால் பாகம் முடிந்திருந்த வேளையிலேயே பங்குச்சந்தை முழுதும் புரிந்து போனது. கதையை கூறிவிட்டு நண்பர் சென்று தன் இருக்கையில் உட்கார்ந்து விட்டார்.. இங்கு நான் சரியான முடிவு எடுக்க முடியாமல் தலையைப் பிய்த்துக்கொண்டு இருக்கிறேன்….

இந்தக்கதை முழுவதையும் பங்குச்சந்தையுடன் ஒப்பிட்டு பார்த்தால் ஒரு மாபெரும் உண்மை விளங்கும்… எனக்கு விளங்கிவிட்டது  🙂 உங்களுக்கு ? ?  😉


செம்மொழியாம் எம் தமிழ்மொழி!





உலகமொழிகளில் முதன்முதலில் கிரேக்கமும் இலத்தீனமும் செம்மொழிகள் என்று கருதப்பட்டன. கி.பி. 1800 – 1900 அளவில் வில்லியம் ஜோன்ஸ், மாக்சு முல்லர் போன்ற அறிஞர் பெருமக்கள் வடமொழியின் தொன்மை நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டதன் விளைவாக வடமொழியினைச் செம்மொழியாகக் கருதும் நிலை அமைந்தது.

1816இல் எல்லிஸ் என்ற அறிஞர் தென்னிந்திய மொழிகள் வடமொழியல்லாத மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை என நிறுவினார். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் டாக்டர் இராபர்ட் கால்டுவெல் திராவிட மொழிக் குடும்பத்தின் சிறப்பியல்புகளை ஆராய்ந்து, அவற்றுள் தமிழ்மொழியின் தொன்மையினையும் வடமொழியினின்றும் தனித்து இயங்குதற்குரிய ஆற்றலையும் உலகறிய நிலைநாட்டினார்.

இவர் நிகழ்த்திய ஆராய்ச்சியின் அடித்தளத்தில்தான் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை தமிழ்த்தெய்வ வணக்கம் பாடியதும், பரிதிமாற்கலைஞர் (வி. கோ. சூரியநாராயண சாத்திரியார்) தாம் எழுதிய “தமிழ் மொழியின் வரலாறு” எனும் நூலில் தமிழ்மொழி உயர்தனிச்செம்மொழி என்ற கருத்தினை வலியுறுத்தியதும் அமைந்தன. இவர்களைத் தொடர்ந்து தனித்தமிழ் இயக்கத்தினைத் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தொடங்கினார். இவ்வியக்கத்தினைத் தேவநேயப் பாவாணர் உள்ளிட்ட பலரும் பேணி வளர்த்தனர். உலகின் முதல் செம்மொழி தமிழ் என்ற கருத்தினைப் பாவாணர் The Primary Classical Language of the World என்ற தம் நூலில் விளக்கியுள்ளார்.

கால்டுவெல் காலத்திற்கு முன்பே, வடமொழியிலும் வல்ல தமிழறிஞர்கள் வடமொழியில் காணப்படாத தமிழ்மொழியின் தனி இயல்புகளைக் கண்டறிந்து கூறினர். இவர்களுள், கி.பி 18 ஆம் நூற்றாண்டினராகிய மாதவச் சிவஞான முனிவர் முதலில் சுட்டத்தக்கவர். இச்சான்றோர் தொல்காப்பியப் பாயிரவிருத்தியில், “தமிழ்மொழி புணர்ச்சிக்கட்படும் செய்கைகளும், குறியீடுகளும், வினைக்குறிப்பு, வினைத்தொகை முதலிய சில சொல் இலக்கணங்களும், உயர்திணை அஃறிணை முதலிய சொற்பாகுபாடுகளும், அகம் புறம் என்னும் பொருட்பாகுபாடுகளும் குறிஞ்சி, வெட்சி முதலிய திணைப் பாகுபாடுகளும், அவற்றின் பகுதிகளும், வெண்பா முதலிய செய்யுள் இலக்கணமும், இன்னோரன்ன பிறவும் வடமொழியிற் பெறப்படா” என்று எழுதியிருத்தல் எண்ணத்தக்கது. தமிழ் மொழியையும் வடமொழியையும் ஒப்பிட்டு முறையாக ஆராய்ந்த முதலறிஞராகச் சிவஞான முனிவர் கருதுதற்கு உரியர்.

பன்மொழிப் புலமைமிக்க, புகழ்பெற்ற தமிழியல் அறிஞர்கள் பலரும் செவ்வியல் மொழிக்குரிய தகுதிகள் யாவும் தமிழ்மொழியில் நிரம்பப் பெற்றுள்ள நிலையினைத் தம் ஆய்வுநூல்களில் நிலைநாட்டியுள்ளனர்.
இருபத்தாறாயிரத்து முந்நூற்று ஐம்பது அடிகளில் உருப்பெற்றுள்ள சங்க இலக்கியம், சிறந்த உலகச் செவ்வியல் மொழிகளின் வரிசையில் தமிழை உயர்த்துகிறது. தமிழர் பண்பாட்டின் விளைவாக விளங்கும் இம்மொழி இந்தியத் திருநாட்டில் ஒப்பற்றது.

தனித்தியங்கும் ஆற்றலையும், தமிழ்மண்வாசனை கமழும் உயர்தரம் கொண்ட இலக்கியக் கொள்கையினையும், யாப்பியல், பாவியல், அணியியல் முதலிய இலக்கணங்களையும் பெற்று விளங்குவது.
சங்கச் செய்யுள் என்பது மொழியியல், யாப்பியல், நடையியல் ஆகியவற்றின் முழுமைபெற்ற வெளிப்பாடாகத் திகழ்வது. தமிழர் பண்பாட்டின் நனி சிறந்த கூறாகத் திகழும் சங்கச் செய்யுள் பிற மொழியாளரால் படியெடுக்க முடியாத விழுமிய இலக்கிய வெளிப்பாடாக இருப்பதுடன், செப்பமும் முழுமையும் வாய்ந்த படைப்பாகவும் திகழ்கிறது. இவ்வகையில், சங்கச் செய்யுள் உண்மையில் செவ்வியல் இலக்கியமாகும்” எனக் கமில் சுவலபில் குறிப்பிடுகிறார்.

உலகப்புகழ்பெற்ற மொழிபெயர்ப்பாளர் ஏ . கே . இராமாநுசன் மேலே கூறப்பெற்ற கருத்தினை வழிமொழிவதுடன், இந்தியச் செம்மொழிகள் இரண்டினில் வடமொழி வழக்கில் இல்லை என்றும் தமிழ்மொழி தொன்றுதொட்டு வழங்கிவரும் சிறப்புக்குரியது என்றும் கூறியுள்ளார்.

மேலே கூறப்பெற்ற மொழிவல்லுநர்களின் கருத்துகள் ஒருபுறமாக, வரலாற்றறிஞர்களும் புதைபொருளாய்வாளர்களும் சிந்துவெளி நாகரிகம் ஆரியர் வருகைக்கு முற்பட்டது என்றும், தொல்பழந்தமிழர் நாகரிகம் என்றும், அங்கு வாழ்ந்தோர் பேசிய மொழி செம்மொழித்தமிழின் மூலமொழி என்றும் நிலைநாட்டியுள்ளனர். திராவிடமொழிகளிலும் வல்ல மேலைநாட்டு வடமொழிப் பேராசிரியர்கள் டி. பர்ரோ, எம். பி. எமனோ உள்ளிட்டோர் வடமொழி வேதங்களில் காணப்படும் எண்ணற்ற தமிழ்ச் சொற்களை ஆராய்ந்து வெளியிட்டுள்ளனர்.
பாணினியின் அட்டாத்தியாயி என்னும் வடமொழியின் மூல இலக்கண நூலுக்குப் பேருரை கண்ட காத்தியாயனர், பதஞ்சலி ஆகியோர் தமிழ் தொடர்பான தம் அறிவினைப் புலப்படுத்தியுள்ளனர். கிரேக்கம், ஈபுரு, சீனம், சப்பானியம், கொரியம், மலாய் உள்ளிட்ட உலக மொழிகளில் காணப்படும் பற்பல தமிழ்ச் சொற்களைத் துறைவல்ல அறிஞர் பெருமக்கள் ஆராய்ந்து வெளியிட்டுள்ளனர். மேலை, கீழை நாடுகளுடனும் தமிழ்மக்கள் கொண்டிருந்த பண்பாட்டு, வணிகத்தொடர்புகளை நாணயவியல், கல்வெட்டியல் மற்றும் இலக்கிய ஆதாரங்களுடன் ஆராய்ச்சிஅறிஞர்கள் நிலைநாட்டியுள்ளனர்.

எனவே, செம்மொழித்தமிழின் சிறப்பும் உலகமக்களுடன் தமிழர் கொண்டிருந்த தொடர்பும் தெள்ளிதிற் புலனாகும்.
நன்றி : தமிழன்பன்(Los Angeles,USA)

காதல் மன்னன் ஆவது எப்படி?


சிரிக்க மட்டும் பகுதியில் பெண்களை பற்றி மட்டுமே நான் எழுதி வருவதாகக் கூறி  நண்பர்கள் பலர் என்னை நொந்து கொண்டார்கள்….. இதோ இளைஞர்களுக்கான உபயோகமான!!! ஒரு பதிவு…..
பெண்களும் படித்துக்கொள்வது நலம் பயக்கும்………..




1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்கங்கே கிழித்துவிட்டு Heart டிசைன் போட்டு தைத்துக்கொள்ளவும்..


2) அந்த ஜீன்சுக்கு(Jeans) கொஞ்சமும் சம்மந்தம் இல்லாதவாறு சில டி- ஷர்ட்களை வாங்கி அணிந்து கொள்ளவும் (கேவலமான கலரில் இருந்தால் இன்னும் உத்தமம்). முக்கியமான விஷயம் அந்த டி – ஷர்ட்டில் மகா மட்டமான வாசகங்கள் இருந்தால் நல்லது.

3) குளிக்கிறீங்களோ இல்லையோ தலைக்கு கலரிங் பண்ணிக்கறது ரொம்ப அவசியம். தப்பித்தவறி கூட தலையில எண்ணெய் வெச்சிடக்கூடாது.


4) ஃப்ரெண்டு கிட்ட இருந்து ஓசியிலையோ இல்லை அப்பாகிட்ட கெட்ட வார்த்தையில திட்டு வாங்கியாவது ஒரு பைக் வாங்கி வெச்சிக்கறது நல்லது. முக்கியமா அந்த பைக் பல்சராவோ(pulsar), அப்பாச்சியாவோ(Apache), யூனிகார்னாவோ(Unicorn) இருக்கறது அவசியம்.

5) உங்க தங்கச்சி கிட்ட இருந்து சண்டை போட்டு ஒரு கம்மலை (Stud)வாங்கி போட்டுக்குங்க.

6) சிகரெட் பிடிக்கிற பழக்கம் இல்லன்னா கத்துக்குங்க. அப்பத்தான் உனக்காக சிகரட்டையே தூக்கி போடுறேன்னு நீங்க ஒரு பிட்டு விடலாம். அவங்களுக்கும் திருத்துறதுக்கு உங்க கிட்ட ஏதாவது ஒரு கெட்ட பழக்கம் வேணுமில்லை.



7) எங்க எல்லாம் ஃ பேன்சி ஸ்டோர் இருக்கோ அங்க எல்லாம் ஒரு அக்கவுண்ட் ஆரம்பிச்சுக்கறது நல்லது. பின்ன கிஃப்ட் வாங்கி கொடுத்தே உங்க அப்பா காசை அழிக்கணும் இல்லை.

8) ரெஸ்ட்டாரண்ட்ல அதிகமா வெங்காயம் கலந்த ஃபிரைட் ரைஸ் சாப்பிட்டு கேர்ள் ஃப்ரெண்டை பார்க்க போனீங்கன்னா உங்க காதலுக்கு நீங்களே ஆப்பு வெச்சுக்கிட்டீங்கன்னு அர்த்தம்.

9) தெரியுதோ இல்லையோ இங்கிலீஷ்’ல பேச தெரிஞ்சுக்கறது ரொம்ப அவசியம். பயப்படாதீங்க. சும்மா மூணு தமிழ் வார்த்தைக்கு நடுவுல I See, Like that, Actually, இதெல்லாம் போட்டு பேச தெரிஞ்சா போதும். 🙂


10) நேரா லேண்ட் மார்க்குக்கோ(Land mark), மியுசிக் வேர்ல்ட்’க்கோ(Music world) போங்க. எதையாவது வாங்க போற மாதிரியே சீரியஸா சீன் போடுங்க. ஏன்னா வாட்ச்மேன் உங்களையே வாட்ச் பண்ணிக்கிட்டு இருப்பான். அவனுக்கு மட்டும் எப்படித்தான் தெரியுமோ? நம்மளையே கரெக்ட்டா வாட்ச் பண்ணுவான். நாம தேடுற கேசட் கிடைக்கலைங்கிற மாதிரியே ரொம்ப ஃபீல் பண்ணி முகத்தை வெச்சிகிட்டு, அங்க இருக்கிற ரெண்டு மூணு இங்கிலீஷ் லவ் பாப் ஆல்பத்தோட பேரை மட்டும் மனப்பாடம் பண்ணி வெச்சுகிட்டு வந்திடுங்க. அந்த கேசட் பேரை சொல்லி உங்க ஆளுகிட்ட “அந்த ஆல்பம் கேட்டியா? வாவ் என்ன லிரிக்ஸ், எனக்கு தூக்கமே வரலைப்பா, உன் நியாபகமாவே இருந்துச்சின்னு சீன் போட உதவும். உங்க ஆளும், அடடா நம்ம ஆளுக்கு என்ன டேஸ்ட்டுன்னு உங்களைப்பத்தி ரொம்ப பெருசா எடை போட உதவும்.

11) காசு இருக்கோ இல்லையோ, பர்ஸோட உள்ளுக்குள்ள சில, பேப்பர்ஸ்’சை மடிச்சு வெச்சுக்குங்க, அடிக்கடி அதை அவங்களுக்கு காட்டுங்க ( இது ஒரு சில சமயம் உங்களுக்கே டேஞ்சரா கூட முடியலாம்) வீணாபோய் யாரவது தூக்கி போட்ட கிரடிட் கார்ட் (Credit card)இருந்தா பொறுக்கி எடுத்து உங்க பர்ஸ்ல வெச்சுக்குங்க. (முக்கியமான விஷயம் கிரடிட் கார்ட் அக்செப்ட் பண்ணாத கடையா பார்த்து கூட்டிட்டு போங்க)

12) அடடா எல்லாத்தையும் சொல்லிட்டு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப முக்கியமான ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது.. மாசத்துக்கு ரெண்டாயிரம் ருபாய்க்கு ரீசார்ச் கார்ட் வாங்கி வெச்சுக்குங்க. முக்கியமான விஷயம் தப்பித்தவறி கூட நீங்க மிஸ்டுகால் கொடுக்க கூடாது.


இதெல்லாம் கரெக்ட்டா ஃபாலோ பண்ணீங்கன்னா, ம்ம்ம்ம்ம்ம்… நீங்களும் ஒரு காதல் மன்னன்தான்…

உதவி: திலீப்,அபிநயா

இரு சக்கர தாய்மார்கள்



ஊரிலிருந்து அப்பா வராத

இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை

கடற்கரையில்

பூங்காவில்

உணவகத்தில்

மிருகக் காட்சி சாலையில்

கழித்து விட்டு

அம்மாவும் சிறுமியும்

வீடு திரும்புவதாகவே தோன்றுகிறது…

இரு சக்கர தாய்மார்கள்

யாரைப் பார்த்தாலும்…!

ராவணன்-அதிக ஏமாற்றம் !



மிகவும்  அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட படம்.ஒவ்வொருவருக்கும்  ஒவ்வொரு விதமானஎதிர்பார்ப்பு !எதிர்பார்ப்புகளே  ஏமாற்றங்களை
உருவாக்குகின்றன.அதிக எதிர்பார்ப்புகள் –அதிக ஏமாற்றம்

ராமாயணத்தை சிதைத்து  விட்டார் மணி.
வசனங்கள் புரியவே இல்லை.

படம் மிகவும் மெதுவாகப் போகிறது.
ஐஸ்வர்யா ராய்க்கு வயதாகி விட்டது.

நகைச்சுவைக் காட்சிகளே இல்லை.
பெண்கள் ரசிக்க படத்தில் எதுவுமே இல்லை –

என்றெல்லாம் கடுமையான விமரிசனங்கள்
வந்து கொண்டிருக்கின்றன.

கமர்ஷியலாக படம் வெற்றி பெறுமா -?
தெரியவில்லை.

என்னுடைய பார்வையில் –

இந்தப் படத்தில் வரும் சில
கதாபாத்திரங்களும்
அவற்றின் சில செயல்கள்பாடுகளும்
ராமாயண கதாபாத்திரங்களை

நினைவுபடுத்துகின்றன.அவை தற்செயல் அல்ல – வேண்டுமென்றே தான் புனையப்பட்டுள்ளன.ஆனால் ராமனையோ – ராவணனையோஆதரிக்கவும் இல்லை.அவமானப்படுத்தவும் இல்லை.இது நிச்சயமாக இன்னொருகீமாயணம் இல்லை.ஒருவித்தியாசமான கற்பனை -அவ்வளவே !

அற்புதமான  இடங்கள்.பசுமையான காடுகள், மரங்கள், அருவிகள் நீர்வீழ்ச்சிகள் – சாதாரணமாக நமக்குகாணக்கிடைக்காத காட்சிகள் !மிகப்பிரமாதமான  ஒளிப்பதிவு.

மனித நடமாட்டமே இல்லாத,போக்குவரத்து
மிகவும் கடுமையாக இருக்கக்கூடியஇந்த இடங்களில் –மின்சார வசதியே இல்லாத
காடுகளுக்கிடையில்,அருவிகளுக்கிடையில் –
மாதக்கணக்கில் இத்தனை கலைஞர்களையும்,
தொழிலாளிகளையும், டெக்னீஷியங்களையும்
அழைத்துச்சென்று, தங்க வைத்துபடம் எடுப்பது –
மிகப்பெரிய உழைப்பு.

நிச்சயமாக உலகத்தரம் வாய்ந்த ஒரு படம்.
படத்தின் தரத்தைப் பற்றி நாம் நிச்சயமாக
பெருமைப்படலாம்.

வசூலை மனதில்கொண்டிருந்தால் –
ப்ரியாமணி கற்பழிப்புக் காட்சியை
15 நிமிடங்களுக்கு நீட்டித்திருக்கலாம்.

படத்தில் பாதி நேரம் நீரிலேயே இருக்கும்
ஐஸ்வர்யா ராயை வெவ்வேறு கோணங்களில்
பெண்மை ததும்ப மிகக்கவர்ச்சியாகக்

காட்டி இருக்கலாம்.

ஒரு ஓவியன் – தன் திருப்திக்காகத்தான்
படம் வரைகிறான். மற்றவர்கள்
எதிர்பார்ப்பதை அல்ல.

ஒரு இசைக்கலைஞன் -தான் ரசிப்பதைத்தான்உருவாக்குகிறான்.மணிரத்னம்  ஒரு அற்புதமான திரைச்சிற்பி.தான் நினைப்பதை, தனக்குப் பிடித்த விதத்தில்உருவாக்குகிறார். அவருக்குப் பிடித்தது
மற்றவர்களுக்கும் பிடித்திருந்தால் அது ஹிட்
ஆகிறது.  உச்ச கட்ட பாராட்டுகளைப்
பெறுகிறது.
ஆனால் மற்றவர்கள் எதிர்பார்ப்பது போல்
அது அமையவில்லை என்றால் – அம்மம்மா
எவ்வளவு தாக்குதல்கள் ?

நம்மிடையே இருக்கும் மிகப்பெரிய
கெட்ட பழக்கம்.  ஒன்று  தலைமேல்
தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடுவோம்.

இல்லை ஏறி மிதித்து துவம்சம் செய்து
விடுவோம்.
படைப்பாளியை அவன் போக்கில்
விட்டு விடுவோமே.
முடிந்தால் பாராட்டுவோம் –
ஊக்குவிப்போம். இல்லையென்றால் –
இருக்கவே இருக்கிறது – அடுத்த படைப்பு !

நமது எதிர்பார்ப்புகளை சிறிது ஒத்திப்போடுவோமே !
மாறாக அவன் படைப்புத்திறனைசிதைக்க வேண்டாமே !ஏற்கெனவே பலமுறை நிரூபிக்கப்பட்டஅவன் திறமையை சந்தேகிக்க வேண்டாமே.

இந்தியா முழுதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய
படைப்பாளிகள் திரையுலகில் எத்தனை
பேர் இருக்கிறார்கள் ?
அதுவும்  தமிழரிடையே ?
உலகம் போற்றக்கூடிய ஒரு படைப்பாளியை
தமிழனாகப் பெற்றதற்காக நாம் பெருமை
அல்லவா பட  வேண்டும்.
அவன் மனம் தளர, தன்னம்பிக்கை இழக்க
நாமே  காரணமாகி
விடலாமா ?

நன்றி: vimarisanam

ரயில் பயணங்களில்…



இப்போதெல்லாம் இரண்டு நாட்கள் விடுமுறை கிடைத்து விட்டால் கூட என் சொந்த ஊரான மதுரைக்கு ரயிலில் கிளம்பி விடுகிறேன் …

ரயிலில் பயணம் செய்வதற்காகவே ஊருக்கு செல்லத்தோன்றுகிறது (ஏன் யாரையாவது பார்க்க செல்கின்றீர்களா? போன்ற comments ஐ தவிர்க்க வேண்டுகிறேன்! 🙂 )…

இது சிறிது நகைச்சுவையாக இருக்கலாம்!…ஆனால் நிச்சயமாக இது சிரிக்க மட்டும் பகுதிக்காக அல்ல… இந்த பதிவினை பாதித்தவை பிரிவிலேயே சேர்க்கின்றேன்!!

இதோ என் ரயில் பயண அனுபவங்கள் உங்கள் முன்னே…இதை நீங்கள் படித்து முடித்த பின் இது நிச்சயம் எனது அனுபவமாக மட்டும் இருக்காது…உங்கள் அனுபவமாயும் இருக்கும் என எண்ணுகிறேன்…..

1.அடிக்கடி காலைத்தூக்கி  நம் மீது போட்டு விட்டு, “ஐயையோ சாரி தம்பி” என அசட்டுத்தனமாய் சிரிக்கும் ரிடையர்டு பெருசுகளின் தொல்லைகள் இருந்தாலும்…..!!!

 

2.மதியச்சாப்பாட்டுக்கு ஆர்டர்  எடுக்க  வரும் IRCTC CANTEEN  ஊழியர், கையில் ஒரு PAPER ஐ வைத்துக்கொண்டு ஆர்டர் எடுக்காமல் நகர மாட்டேன் என அடம் பிடித்துக்கொண்டு நம்மை சங்கடப்படுத்தினாலும்…..!


3.ஜன்னல் சீட்டை ஜென்மத்துக்கும் TENDER எடுத்துவிட்ட தொனியில் அங்கே FEVICOL PIDILITE ஐ அப்பிவிட்டததைப்போல “பச்சக்” என உட்கார்ந்து கொண்டு போவோர், வருவோரை எல்லாம் ஒரு வித அதிகார தோரணையில் பார்த்துக்கொண்டிருக்கும் “அரசாங்க ஊழியரின்” அழிச்சாட்டியமாகாட்டும்…..


4.”MIDDLE BERTH’ல் நாம் படுத்திருக்க, TOILET போக UPPER BERTH’ லிருந்து இறங்கும் பொடிசுகள் நம்மை எசகு பிசகாக எங்காவது மிதித்து விட்டு ,ஒரு  SORRY கூட சொல்லாமல் அரை தூக்கத்தில் நடந்து சென்று, BATHROOM கதவுக்கு பதில் COMPARTMENT கதவை திறந்து விட்டு அலறும் போதும்…..


5.புழுக்கமாக இருக்கிறது என, நாம் எழுந்து செல்லும் போது அழகான மகள்களுடன் பயணித்துக்கொண்டிருக்கும் ஆன்ட்டிகள் , நாம் என்னவோ அவர்களின் மகள்களைப் பார்க்கத்தான் எழுந்து வருவதாக எண்ணி சீரியல்களில் வரும் வில்லன்களை முறைப்பது போல முறைத்துப்பார்க்க்கும் போதும்…….!


6.பெரும்பாலான நேரங்களில் BATHROOM’களில் தண்ணீர் வராமல் நம்மை பாடாய்ப்படுத்தினாலும்..(ஒரு முதியவர் முழு MINERAL WATER CAN ஐ உள்ளே கொண்டு சென்று விட்டு வரும் போது கால்வாசி கேனோடு வந்ததை கவனித்திருக்கிறேன்….மீதமிருந்த தண்ணீரை குடித்திருப்பார் என எண்ணுகிறேன்!!!!!!!  )


7.எதிரே உட்கார்ந்திருக்கும் முரட்டு மீசை, கருத்த ஆசாமி Egmore ‘ல் இருந்து செங்கல்பட்டு வரை நம் மீது வைத்த கண்ணை எடுக்காமல் வெறித்துப்பார்த்து “கிலி” ஏற்ப்படுத்தினாலும்….!


8.அக்கடா என எழுந்து உட்கார்ந்து இருக்கும் போது வந்து முகத்துக்கு நேரே கும்மிஅடித்து காசு கேட்டு தொந்தரவு செய்யும் அரவாணிகளின் தொல்லை ஒரு பக்கம் இருந்தாலும்……


9.நம் கவனத்தை ஈர்க்க அண்டை COMPARTMENT சிட்டுகள் மெனக்கெடுவதை பார்க்கும் போது அவர்கள் பருவத்தில் நாம் பட்ட மெனக்கெடல்களின் ஞபகங்கள் வந்து நம்மை ஏதோ செய்து தொலைத்தாலும்…


10.திருச்சியில் இறங்கி பிரியாணி பொட்டலம் வாங்கிவிட்டு ஏறி வந்து பார்க்கும் போது  UNRESERVED ஆசாமிகள் நம் சீட்டில் உட்கார்ந்து கொண்டு நம்மைப்பார்த்தே “தம்பி இது உங்க சீட்டா?” என கேனத்தனமாய் சிரித்துக்கொண்டே கேட்டு வெறுப்பேற்றும் போதும்…..


11.நாம் அசந்த நேரத்தில் ,நம் தோளின் மீது சாய்ந்து தூங்கி , நம் சட்டைக்கு ஜொல்லாபிஷேகம் செய்து விட்டு…நாம் விழித்வுடன்…. “சாரிங்க! கவனிக்கல” என சொல்லிக்கொண்டே ஒழுக விட்டதை துடைக்கிறேன் பேர்வழி என அதை சட்டை எல்லாம் பரப்பிவிட்டு நம் கண்களை சிவக்க வைக்கும் மனிதர்களின் தொல்லைகள் இருந்தாலும்…..


12.நம்மைக் கேட்காமலேயே நம் LUGGAGE ஐ எடுத்து தலைக்கு வைத்துக்கொண்டு குறட்டை விட்டுத்தூங்கி நம்மை பொறுமையின் உச்சிக்கே அழைத்துச்செல்லும் வடநாட்டு பெருசுகளின் சண்டியர்த்தனமாகட்டும்….

13.தம்பி மதுரை எப்ப வரும் என மனிக்கொறுமுறை கேட்டு மேலும் நம்மை ஊசுபேற்றி விடும் பாட்டிகளின் தொல்லைகள் இருந்தாலும்…..


இன்னும் இப்படி எத்தனை எத்தனையோ இருந்தாலும்…..

தாயைப்போல தாலட்டிக்கொண்டே அழைத்துச்செல்லும் வண்டியில்……..அந்த அந்தி சாயும் நேரம்………ஜன்னல் ஓர இருக்கை……கன்னத்தை முத்தமிடும் குழந்தையைப்போல  , மெதுவாய் நம் கன்னம் வருடும் தென்றல் காற்றை அனுபவித்து கண்களை சிறிது மூடினால்……..” பள்ளிப்பருவத்துக் காதல்.., பேருந்துக்காதலியின் முகம்…, பள்ளிக்கு அருகே பஞ்சு மிட்டாய் விற்ற அந்த நெட்டை மனிதர்….,கல்லூரியில் எழுதிய முதல் APOLOGY LETTER….,முதல் சண்டைகள்….., துயரம் தந்த பிரிவுகள்….., என எத்தனையோ முதல்கள்  வந்து நெஞ்சைப்பிசைந்து ஏதோ செய்து…நம் விழிகளின் ஓரத்தை ஈரமாக்க, கண்கள் துடைத்து நிமிர்ந்து பார்த்தால்…. மல்லிகை மணம்….மனிதர்களின் மணம்….நச்சுகலக்காத காற்றின் இதம்….. 

ஆகா! மதுரை வந்து விட்டது…….

ஏலே மாப்புல… என்னடா இம்புட்டு லேட்டா வார? வொக்காலி
, வண்டிய உருட்டி எடுத்துட்டாய்ங்களா டா”? என கேட்டுக்கொண்டே கொண்டே வந்து பையை வாங்கும் நேசமிகு மனிதர்களின் முன் சென்னையின் HI-TECH மனிதர்கள் எறும்பை விட சிறிதாய் தெரிந்தார்கள்…..

கலக்கலாக ஒரு ‘காதல்’ கடிதம்!


முன் குறிப்பு:இந்த பதிவு முற்றிலும் நகைச்சுவைக்காக மட்டுமே.நகைச்சுவையாக  பார்ப்பவர்கள் மட்டுமே தொடரவும். .இந்த பதிவில் வரும் கதாபாத்திரங்கள் யாவும் கற்பனையே!!!எந்த ஒரு தனி நபரையும் குறிப்பிடுவது அல்ல.

(நீல்கிரிஸ்,ராயப்பஸ்,தலப்பாகட்டு,ஆனந்தபவன்,

அன்னபூர்ணா இவை யாவும் சென்னையின் Class உணவகங்கள்!!!)

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

காதலிக்கு ஓர் கடிதம்!

அன்பே!

நீ சொன்னாய் என்பதற்காகத்தான் உனது அப்பாவிடம் பேசிப் பார்க்கலாம் என்ற
முடிவுக்கு வந்தேன். ‘அலுவலகத்தில் இருக்கிறேன் , நீல்கிரிஸில்
சாயங்கலாம் சந்திக்கலாம்’ என உன் தகப்பன் தொலைபேசியில் சொன்னபோது கடமை
தவறாதவனின் மகளைத்தான் காதலித்திருக்கிறோம் என இறுமாந்திருந்தேன்.

சொன்னபடி ஐந்து மணிக்கெல்லாம் வந்தமர்ந்த உனது அப்பனைப் பார்த்த போது
‘எருமை மாட்டிற்கு மான் குட்டி எப்படி பிறந்தது?!’ என்ற பழைய கவிதைதான்
நினைவிற்கு வந்தது. மான்குட்டி என்ற வர்ணனை உனக்கு அதிக பட்சம்தான்
என்றாலும் எருமை மாடு என்பது உனது அப்பனுக்கு மிகக் குறைந்த பட்சம்தான்.
அந்தக் கடையில் பில் போடுவதற்காக இருந்த கம்ப்யூட்டரைத் தவிர மீதம்
இருந்த அனைத்தையும் தீன்று தீர்த்துவிடும் வெறி அவரது கண்களில் மின்னியதை
நான் கவனிக்கத் தவறிவிட்டேன். சரி எதையாவது சாப்பிட்டுவிட்டு பேச்சைத்
துவங்கலாம் என சர்வரை அழைத்தேன். அதற்குப் பின் உனது அப்பனின்
கைங்கர்யத்தால் சமையல் கட்டிற்கும் டேபிளிற்கும் இடையே சுமார் ஐம்பது
ஓட்டங்கள் எடுத்தான் சர்வர். ராயப்பாஸிலும், தலப்பாகட்டிலும் நீ புஃல்
கட்டு கட்டுவது ஒரு ஜெனடிக் பிரச்சனை(Genetic Problem)என்பதைக் கண்டுகொண்டேன். வேழ
முகம்தான் இல்லையே தவிர பேழை வயிறு இருக்கிறது உன் பரம்பரைக்கே…

அவரது வேட்டையை முடிவுக்கு கொண்டு வர இயலாதவனாக கையறு நிலையில்
இருந்தபோது ‘ தம்பி இப்பல்லாம் முன்ன மாதிரி சாப்பிட முடியறதில்லபா…
வயசாச்சில்ல…’ என தன் திருவாய் மலர்ந்தார். திடப்பொருட்களிலிருந்து
ரோஸ்மில்க் போன்ற திரவப் பொருட்களுக்கு மாறினார். அப்பாடா, முடித்து
விட்டார் என்ற ஆசுவாசத்தை, ‘ ஒரு கஸாடா’ (Gazata)என்ற வார்த்தையில் உடைத்தார்.
கஸாட்டாவும், ஜர்தா பீடாவும் சாப்பிடுவதில்லை என்பதைத் தவிர
திருச்செந்தூர் கோவிலில் உண்டைக்கட்டிக்கு காத்திருக்கும் கோவில்
யானைக்கும் உனது அப்பனுக்கும் ஆறு வித்தியாசங்கள் கூட இல்லை.
‘தம்பி எப்ப
சாப்பிட்டாலும் கடைசியா ஒரு ஐஸ் க்ரீம் சாப்பிடுறது நல்லதுப்பா’ என்ற
அவரது கூற்றில் இருந்த கடைசியா எனும் வார்த்தைதான் எனக்கு வாழ்வின் மீது
நம்பிக்கையை ஏற்படுத்தியது.

‘சார், நான் உங்க பொண்ணை விரும்புறேன். அவளையே கல்யாணம் பண்ணிக்க
ஆசைப்படுறேன். அது விஷயமாப் பேசத்தான் உங்களுக்கு போன் பண்ணினேன்’ என்று

மெல்ல பேச்சைத் துவங்கினேன். ‘ அப்ப போனவாரம் இதே விஷயமாப் பேச ‘ஆனந்த

பவனுக்கு’ வந்தது நீங்க இல்லையா தம்பி?!’ என ஆச்சர்யமாக அவர்
கேட்டபோதுதான்,
மொத்தக்குடும்பமும் இரை எடுப்பதற்கென்றே எவனையாவது
இரையாக்குவதை புரொபஷனல் டச்சோடு செய்கிறீர்கள் என்பதை உணர்ந்தேன். ”

“தம்பி இது பெரிய விஷயம், ஒரு நாளில் பேசித் தீர்த்துவிட முடியாது. நீங்க
ஒன்னு பண்ணுங்க… நாளக்கி சாயங்காலம் அன்னபூர்ணா வந்துடுங்க… அப்ப
பேசிக்கலாம்” என்ற உனது தகப்பனைக் கொலை செய்ய அந்த நேரம் என்னிடம்
துப்பாக்கி இல்லாமல் போனது துர்பாக்கியமே.

இப்படிக்கு,
இரை தேடும் குடும்பத்திற்கு இரையாகிவிடாமல் இறையருளால் தப்பித்த உன்னுடைய
முன்னாள் காதலன்.
XXXXXXXXXXXXXX.

பொறுக்கிப் பசங்க!


விசிலடித்து,கானா பாடி

ஓடும் பஸ்ஸை ஓட விட்டு

ஓடி வந்து ஏறி

கண்டக்டரை கலாய்த்து

ஒவ்வொரு நிறுத்தத்திலும்

இறங்கி இடம்விட்டு ஏறி

படிக்கட்டு பிரயாணத்தில்

பயணப்படும் இளசுகள்

பொறுக்கிப் பசங்கலாம்…

அடக்கமாய்,அமைதியாய்

பேருந்தினுள் சென்று

ஒன்றுமே அறியாத

அப்பாவி போலே

பெண்களின் அருகில் நின்று

உரசும் பெருசுகளின்

உன்னத வார்த்தையில்.

நீங்கதான் ஹீரோ.?!


என் நண்பர் ஒரு லிங்க் எனக்கு அனுப்பி இருந்தார்..அதை கிளிக் பண்ணி போய் பார்த்த போது அவர் முகம் கதாநாயகன் என்று மின்னியது..அந்த வீடியோவை பார்த்து முடித்த மாத்திரத்தில் அசந்து விட்டேன்..அவ்வளவு அருமையான ப்ரோக்ராம்மிங்..ஓடும் வீடியோவில்..நாம் விரும்பும் முகம் ஹீரோ கெட் அப்பில்..


Link: http://en.tackfilm.se/?id

இதுதான் அந்த லிங்க்..loading ஆகும் வரை கொஞ்சம் பொறுத்திருங்கள்..

browse பட்டன் ஐ கிளிக் செய்து உங்கள் படத்தை இம்போர்ட் பண்ணுங்க..வீடியோ பாருங்க..ஹீரோ ஆகுங்க..!!

இப்போ அந்த லிங்க் ஐ காப்பி செய்து உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி மகிழலாம்.

சிப்பாய்கள் என்ன ஆனார்கள்?




மஹாபாரதம் இதிகாசமானது..
பகவத் கீதை
வேதமானது
கண்ணன்
அர்ச்சுனன
அனைவரும் கடவுளானார்கள்..
எல்லாம் சரிதான்!
குததிக்கொண்டும் வெட்டிக்கொண்டும்
மாண்டுபோன லாட்சோப லட்ச
சிப்பாய்கள் என்ன ஆனார்கள்?