பெங்களூர் இடிகள்!


Image

பெங்களூரு – மெத்தப் படித்திருக்கும் இளைஞர்களின் (குறிப்பாக தமிழ் இளைஞர்கள்) கனவு நகரம்.

பெங்களூருக்கு வந்து ஒரு வருசத்துக்கும் மேல ஆகிப்போச்சு. இதையெல்லாம் வாழ்க்கையில பாப்போமான்னு கனவுல மட்டுமே நினைச்சுட்டு இருந்த பல விஷயங்களை  எல்லாம் சலிக்க சலிக்கப் படம் போட்டுக் காட்டுன இந்த  ஊரைப் பத்தி ஏதாவது எழுதணும்ன்னு தோணுச்சு.அதோட விளைவு தான் இந்தப் பதிவு.

சரி! இனி பதிவுக்குள் …

ஓசூர்!

இந்த ஊரைக் கிராஸ் பண்ணும்போதே வயித்துல லைட்டா பட்டாம் பூச்சி பறக்கும்! (புது ஊரு,தெரியாத அட்ரெஸ்சை எப்படி டா கண்டுபுக்கப் போறோமுங்குற வவுத்து கலக்கல்ன்னு கூட சொல்லலாம்!) அடுத்த ஒரு மணி நேரத்துல பெங்களூரு!

வந்த புதிதில் எல்லாமே இடிகளாகத்தான் உச்சி மண்டையில் இறங்கும். சில இடிகள் அதிர்ச்சியானவை,சில இடிகள் சுவாரசியமும் ஆர்வம் கூட்டுபவையாவும் இருக்கும்.அவ்விடிகளை ஒவ்வொன்றாய் வரிசைப்படுத்துகிறேன்!

இடி – 1 : மடிவாலா,மடிவாலான்னு கண்டக்டர் பொடியன் சத்தம் போடும்போதே உசாரா எந்திரிச்சு உக்காந்துக்கணும்.இல்லனா அம்புட்டுதேன்..
 பெங்களூருக்கு புதுசா வர்ற நம்ம பயலுகளுக்கு உச்சந்தலையில மொதோ இடியை இறக்குறது இந்த ஆட்டோக்காரவிங்கதான்! என்பது மீட்டர் தூரம் கூட ஆகாத அட்ரஸ்சுக்கு என்பது ரூவா கேட்டு அவன் பர்சுல வெடியை வெப்பாணுக.வேற வழியில்லாம அதுல ஏறிப்போயி,ஒரு வழியா அட்ரெஸ்சைக் கண்டுபுடிச்சி போய் சேர்ந்துடுவாணுக.

இடி – 2 : இத்தனை நாளா,நம்ம ஊருல சரவண பவன்,மாமி மெஸ்,
,முக்குல இருக்க தள்ளுவண்டிக் கடைகள்ல ரெண்டு இட்டிலிக்கு மூணு லிட்டர் சாம்பாரைக் குடிச்சுப் பழகியிருக்கலாம்.ஆனா,பெங்களூர் வந்ததும் நீங்க  வெறுக்குற முதல் விஷயம் சாம்பாராத்தான் இருக்கும்.எப்படித்தான் இப்படி சாம்பாரை வைக்குறாய்ங்களோ தெரியல.(அந்த சாம்பாரையும் விடாம ஒருத்தன் வளைச்சுக் கட்டி அடிச்சா அவன் “கன்னடிகா” என்றறிக).

இடி – 3 : பஸ்ஸு போர்டை பாத்ததுமே வயித்தைக் கலக்கிரும்.போர்டுல என்னத்தை எழுதிருக்காய்ங்கன்னே தெரியாது.எல்லாம் நம்பரை வெச்சுதான் கண்டுபுடிசுக்கணும்.(இவ்விடத்தில் கன்னடர்களின் மொழிப்பற்றை வியந்தாக வேண்டும். பெரும்பாலான பேருந்தின் பலகைகளில் கன்னடத்தில் மட்டுமே எழுதியிருக்கிறார்கள்) டிக்கெட் ரேட்டுகளைப் பத்தி பேச எல்லாம் நமக்கு வக்கில்ல.சோ, அதை ஸ்கிப் பண்ணிடலாம்.

இடி – 4 : ஸ்லீவ்லெஸ் சுடிதாரைப் பாத்தாலே “டங்க்ஸ்ட்டன்” ஆகி பழகிப்போன நாம,பெங்களூர் பொண்ணுகளோட ட்ரெஸ் கோடுகளுக்கு(Dress Codes) செட் ஆக ரொம்ப நாளாகும்.லாஸ் ஆப் பே’ல (Loss of pay)லீவெல்லாம் போட்டு இதுக்குன்னே, எம்.ஜி ரோடு,கமர்சியல் ஸ்ட்ரீட்டு,மந்த்ரி மால், சென்ட்ரல், போரம்’ன்னு போயிட்டு வருவாய்ங்க!

இடி – 5 : மொழிப் பிரச்சினை .. அது இல்லாமலா?”கன்னடம்”…. தக்காளி,சைனீஸ் மொழியைக்கூட பேசி படிச்சு பழகிப் புடலாம் போல.ஆனா,கன்னடம் ம்ம்ஹூம். சாதரணமா, பஸ்ல கண்டக்டர் பேசுற கன்னடம் உங்களுக்கு புரிஞ்சிட்டாலே நீங்க பெரிய ஆளுதான்.

 

                                                                  Image

இடி – 6 : குடும்பத்தோட கல்லை கட்டிக்கிட்டு கிணத்துக்குள்ள கூட குதிச்சுடுங்க.ஆனா,இந்த ஊரு பார்க்குகளுக்கு மட்டும் புள்ளை குட்டிகளோட போக ப்ளான் போட்டுடாதீங்க.பெரும்பாலான இன்ஸ்டன்ட் காதல்களின் (Instant love) விரக தாபத்தை தீர்க்கும் படுக்கை அறைகளாக அவை மாறிப்போய்  எப்போதோ புண்ணியம் தேடிக்கொண்டுவிட்டன.

இடி – 7 : பார்க்குகள்ல தான் அந்த அக்கப்போரு பண்ணுறாய்ங்கன்னா, எட்டு மணிக்கு மேல எந்த சந்துக்குள்ளையும் போக முடியாது! எல்லாம் செட்டு செட்டா நின்னு ரொமான்ஸ் பண்ணிட்டு இருப்பாய்ங்க.நம்ம பய இப்படி சீனை எல்லாம் மலையாள பிட்டுப் படத்துல மட்டுமே பாத்திருப்பான்.அந்த ஆர்வத்துல கொஞ்சம் எசகு பிசகா அவிங்களா என்னமாது (!!!) பண்ணிட்டா அம்புட்டுதான்,அந்தப்பையன் கூட கண்டுக்காம “காரியமே கர்ம்மமாக” இருப்பான்,ஆனா,அந்தப் புள்ளை சும்மா விடுமா? கன்னா பின்னான்னு கத்தி விட்டுரும்.அது என்ன மொழின்னு கண்டுபுடிக்கவே நமக்கு நாப்பது நாள் ஆகும்,என்ன திட்டுனான்னு புரிஞ்சு போயி கடுப்பாகி பத்து நாள் கழிச்சு,அதே இடத்துக்கு அவளைத் தேடிப்போனா அதே பொண்ணு,வேற பையனோட ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கும்… அங்க டென்சன் ஆகாம யதார்த்தத்தை புரிஞ்சிகிட்டா,அங்கேயே நீங்க பாதி பெங்களூர்வாசி ஆகிட்டீங்கன்னு அர்த்தம்..

 இடி – 8 : கொஞ்சம் வெள்ளையா இருந்துட்டா போதும்(அவ்வ்வ்வவ்வ்வ்வ்…. 😦 ),அவிங்களே நம்மளை வடநாட்டுக்காரன்னு முடிவு பண்ணிருவாய்ங்க. வர்ற புதுசுல, பல “கித்துனா பனானா ஹை” களை கடக்க வேண்டியிருக்கும்.

இடி – 9 : ஒரு சில புள்ளைகளைப் பாத்தா, உங்களுக்கு எண்ணத்தா இம்பூட்டு வறுமைன்னு வாயை விட்டே கேட்டுடலாம் போல இருக்கும்? அப்படித்தான் கிழிச்சு விட்டு சுத்துமுங்க. அதுலயும் ஒரு சில வட நாட்டுப் புள்ளைய நாலு படி மேல போயி,நம்ம ராஜ்கிரண் மாதிரி டவுசரை மாட்டிகிட்டு டவ் சோப்பு (Dove soap) வாங்க வந்து நம்ம டவுசரைக் கழட்டிருவாளுக. நம்ம ஊரு புள்ளைகளை கேக்கவா வேணும்? ஸ்ஸ்ஸ்சப்பா..உங்க வீட்டு அலும்பா எங்க வீட்டு அலும்பா?!?!.. ஊருல  இருந்தப்ப ஓட்டைக் கண்ணாடியும் இந்திரா காந்தி சுடிதாரையும் மாட்டிகிட்டு திரிஞ்சதுக இங்க வந்ததும், பாஸ்ட் ட்ராக் கண்ணாடி(Fast track coolers),டைட்ஸ் டி-சர்ட்,தெறிக்கிற மாதிரி ஜீன்சுன்னு அலப்பறை பண்ணி அல்லையை கட்ட விடுதுங்க. பயலுகளும் சளைச்சவனுக இல்ல! நண்பன் பலராமனோட இந்த ஒரு பதிவு போதும்.அவிங்களைப் பத்தி தெரிஞ்சிக்க!

இடி – 10 :  M.E கெமிக்கல் இன்ஜீனியரிங்கே படிச்சிருந்தாலும் நமக்கென்னவோ தமிழையும்,இங்கிலீசையும் தவிர்த்து வேற ஏதாவது மொழினா வேர்த்துக் கொட்ட ஆரம்பிச்சிடும்.ஆனா,நாம தங்கியிருக்க பிளாட் ஓனரு மூணாவது பெயில் ஆகியிருப்பாரு.ஆனா, அழிஞ்சு போன ஹீப்ரு மொழியைத் தவிர எல்லாத்தையும் அவரு சரளமா பேசுறதைப் பாத்து நமக்கு பேக்குல/பிரன்ட்டுல எல்லாம் பயர் ஆகும். கேரட் ஜூஸ் குடிச்சு ஆத்திக்கணும்…

இடி – 11 : பஸ் ஸ்டாப்பு , டீக்கடைன்னு பொண்ணுங்க எல்லா இடத்துலையும் பசங்களுக்கு போட்டியா நின்னு தம் அடிக்குங்க.அதை, வாயைப் பொளந்துகிட்டு  ஆச்சரியமாப் பாத்தா நீங்க இன்னும் பக்குவப் படலைன்னு அர்த்தம்.

இடி – 12 : பொட்டிக்  கடையில கடலை  மிட்டாயோ,முறுக்கோ  வாங்கப் போறதை மத்தவங்க பாத்துருவாங்களோன்னு நீங்க  பயந்து நின்னுட்டு இருக்க அதே சமயத்துல, பதினெட்டு வயசுப் பையன் ஒருத்தன் உங்க முன்னாடியே அதே பொட்டிக் கடையில காண்டம்(Condom) வாங்கிட்டுப் போவான்… நீங்க காண்டாகாம இருக்கணும்.

கொசுறு : எல்லாத்துக்கும் மேல பெங்களூர் வந்ததும் கந்து வட்டிக்காவது கடனை வாங்கி  முதல் காரியமா நீங்க செய்ய வேண்டியது ரெண்டு விஷயம் இருக்கு.முதலாவது ஒரு ஜெர்க்இன்(Jerkins) வாங்குறது,ரெண்டாவது ஒரு பிளாக் கலர் கூலர்(Cooling Glass) வாங்குறது.முன்னது,பெங்களூர் குளிருக்கு,பின்னது,இந்த ஊர் பொண்ணுகளுக்கு.நீங்க யார் யாரையெல்லாம் எங்கெங்க பாக்குறீங்கன்னு யாருக்கும் தெரிஞ்சிடக்கூடாதுல்ல அதுக்குத்தான்.. 😛 இது ரொம்ப முக்கியமுங்க! ஏன்னா பெங்களூர் தான்  பெண்களூர் ஆச்சே!! 😉

 

இடி இன்னும் விழும்!

                                

இதாங்க தமிழ் சினிமா! பாகம்-2


இதாங்க தமிழ் சினிமா-2 !

எனது வலைப்பக்கத்தில் பட்டையை கிளப்பிய இதாங்க தமிழ் சினிமா பாகம்-1 (300க்கும் மேலான பார்வைகள்)படிக்க இங்கே சொடுக்கவும்

நம் தமிழ் சினிமாவைப் பொருத்த மட்டும் ஒவ்வொரு இயக்குனருக்கும் ஒரு தனிப்பட்ட பாணி என்று ஒன்று இருக்கும் அல்லவா? அதைப்பற்றி தான் அலசப்போகிறோம்…

வழக்கம் போல இதுவும் நகைச்சுவைக்காகத் தான்.. சிரிக்க மட்டும் என்று நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டுமா? 🙂

சிங்கர் படம்:

* சொல்லவே வேணாம்! வர் படத்தை எடுக்க வர்ற தயாரிப்பாளர்,அவரோட கோவணம் முதற்க்கொண்டு எல்லாத்தையும் விற்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படலாம்! அதுக்கெல்லாம் தயாரா இருக்கணும்.

* படத்தோட Script மட்டும் 1  1/2 வருசம் எழுதுவாரு! அப்புறம் படத்தை எடுக்க ஒரு 1 1/2 வருசம்.இந்த மூணு வருசம் கழிச்சு தான் நமக்கு இவர் படத்துல யார் யார் நடிக்கிறாங்கிற தகவலே தெரிய வரும்.

* படத்துல வேலை பாக்குற தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லாம் அவங்க வீடு,வாசல்,புள்ள குட்டிங்க எல்லாத்தையும் மறந்துட்டு,டைனோசர்,எலும்புக்கூடு,ரோபாட் இதுங்க கூட தான் குடும்பம் நடத்தனும்!

* ஒரு சீன்லயாச்சும் ஹீரோவ “Puppy Shame” ல காட்டுவாரு! அப்படி இல்லனா, ஹீரோவ அப்படியே அலேக்கா தூக்கி நட்ட நடு கூவத்துல Underwear ரோட இறக்கி விட்டுடுவாரு,அதையும் தாண்டி வெளிய வந்தா ஒரு 10 பேரு நிப்பானுக,அவனுகள எல்லாம் அப்படியே சகதி சாக்கடையோட தூக்கிப் போட்டு பந்தாடனும்!

* பாவம் மனுசன்,தமிழ் சினிமா உலகத்துல ரொம்ப நல்ல பேரு வாங்கி இருந்தாரு, பூய்ஸ்’ணு  ரூட்டு மாறி ஒரு படத்தை எடுத்து தனக்குத் தாணே ஆப்பு வெச்சுக்கிட்டாரு!

மிணிரத்னம் படம்:

* இந்த சைலன்ட் கில்லர்’னு ஒன்னு கேள்விப்பட்டிருக்கோம்ல? அது வேற யாரும் இல்ல! இவரு தாங்க!

* இவரோட படம் ஓடுற தியேட்டர்’ல இருந்து யாராச்சும் சட்டைய கிழிச்சுக்கிட்டு வெளிய ஓடி வந்தா நீங்க பதறிடாதீங்க.எல்லாத்துக்கும் இவர் மனைவியோட கைவண்ணம் தான் காரணம்.. யதார்த்தமா வசனம் எழுதுரேன்னு சொல்லிக்கிட்டு இந்த அம்மா பண்னுற கரச்சல் இருக்கே, யப்பா? முடியலங்க,அங்க இங்க கைய வெச்சு கடைசியா அம்பானி குடும்பத்துக்கே ஆப்படிச்சுட்டாய்ங்க!(ராவணன் by BIG PICTURES)

* என்ன வசனம் பேசுறோம்னு அந்த வசனத்தப் பேசுற கதாபாத்திரத்துக்கே கேட்காதுங்க! அப்புறம் எங்க நமக்கு கேட்கப்போகுது! “புஸ்ஸு புஸ்ஸூ’னு” வெறும் காத்து மட்டும் வர்ற கொடுமையை கேட்க 5.1 DTS Surround Sound mixing  வேற!

* ரொம்ப திறமையான ஆளு தான்,என்னணே தெரியல படம் தான் ஓட மாட்டேங்குது! ஹி ஹி…

பெளதம் மேனன் படம்:

* இவரு இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லங்க!ஆலிவுட்டுல(Hollywood) படம் எடுக்க வேன்டிய ஆளு…அட நெஜமாத்தாங்க!

* தமிழ்’ல படம் எடுக்குறேன்னு சொல்லிட்டு படத்த ஆங்கிலத்துல எடுத்து, தமிழ்’ல “SUBTITLE” போட்டு பல பேரை கடுப்பேத்துன கனவான் இவருதாங்க! (ங்கொய்யால! வாரணம் ஆயிரம்,வண்டெலி ஆயிரம்னு படத்தோட “TITLE” வக்கனைக்கு மட்டும் கொறச்சலே இருக்காது 🙂 )

* “Derailed” படத்தை சுட்டு பச்சைக்காக்கா முத்துச்சரம்’னு ஒரு படம் எடுத்தாரு! ஆஸ்கார் வாங்க வேண்டிய  படம்……சே! நம்மாளுக்கு just missu….

* அய்யாகிட்ட ஒரு வேண்டுகோள்..” தமிழ் படத்தை கொஞ்சம் தமிழ்’ல எடுங்க ராசா…”

தெங்கிட் பிரபு படம்:

* கதை கால் கிலோ என்ன விலை‘னு கேக்குற ஆளு இவரு!

* படத்தோட கதை என்ன’னு இவருக்கு மட்டும் இல்ல,இவரு படத்துல நடிக்கிற நடிகர்களுக்கே கூட தெரியாதுங்க!

* என்னத்தையோ எடுக்குறாரு.. நாமளும் பாக்குறோம்… படமும் ஓடிடுது..

வேலு மகேந்திரா:

* இவரு படத்துல நடிக்கிற நடிகைகளுக்கு costume செலவே இல்லங்க!

* ஒரே ஒரு சட்டை தான் … என்னது கீழயா? அதெல்லாம் கிடையாது.. அந்த சட்டைல ஒரு நாலு இன்ச் இறக்கம் வெச்சு தைச்சு கொடுத்துடுவாரு.. அவ்வளோ தான்!படம் எல்லாம் இதான் costume…

* இவர யாரச்சும் google’ல  தேடி இருக்காரானு பாத்து சொல்லுங்கப்பா???

காலா படம்:

* இவரு கொஞ்சம் வில்லங்கமான ஆளூங்க..கடவுளையே கெட்ட வார்த்தையில திட்டி வசனம் எழுதின முதல் ஆளு இவரு தான்.

* இவர் படத்துல நடிக்கிற கதாநாயகன் என்ன தான் உத்தமனா இருந்தாலும் , இவருகிட்ட வந்துட்டா கஞ்சா அடிக்கணும்,கதாநாயகிய அடிக்கணும்,சாமியாரா நடிகிற ஆள அடிக்கணும், மொட்டை அடிக்கணும்,வர்ற‌வன் போறவனை எல்லாம் அடிக்கனும்…

* வில்லங்கமா என்னத்தையாவது வெட்டிக் கொண்டு வர சொல்லுவாரு,கண்ட எடத்துல எடத்துல எல்லாம் கையை வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.. 😉

* கோவணத்தை கட்டிகிட்டு குடல் , குந்தானி எல்லாம் வாய் வழியா புடுங்கிட்டு வர்ற மாதிரி தலகீழா நிக்கனும். நான் கிடவுள்னு ஒரு படத்தை நாலு வருசமா எடுத்தாரு,அது 40 நாள் கூட ஓடல (அந்தப் படம் தேசிய விருது வாங்கினது வேற விசயம் 🙂 )

ரூம.நாராயணன் படம்:

* உசிலம்பட்டி தாலுகா,கீரிப்பட்டி கிராமம்,வடக்குத்தெரு,7ம் நம்பர் வீட்டுல இருக்க முனியம்மாவுக்கு பிரச்சனைனா கூட அம்மனே நேரா வந்து பல Performance களைப் பண்ணி காப்பாத்தும்னு காமெடி பண்ண ஆளு இவரு

* அவனவனுக்கு மனுசங்களை வெச்சு படம் படம் எடுக்குறதுக்குள்ளவே தாவு தீர்ந்து போகுது,ஆனா இவரு யானை,குரங்கு,பாம்புனு ஒரு குட்டி அனிமல் பிளானட்டையே நடிக்க வெப்பாரு..

* என்ன ஒரு கொடுமைனா அதுங்களுக்கு எல்லாம் சட்டை, டிரவுசரை மாட்டி ஆட விட்டு கடுப்பேத்துவாரு.. அதை தான் தாங்க முடியாது! கொடுமைடா சாமி!

* இவரோட ஒரு படத்தை பாத்துட்டா போதுங்க, எல்லா படத்தையும் பாத்த மாதிரி தான்! ஏன்னா எல்லாப் படமும் ஒரே மாதிரி தான் இருக்கும்..

கமீர் படம்:

* ரொம்ப சிக்கனமான ஆளுங்க,இவரோட படத்துல நடிக்கிற ஹீரோவுக்கு ஒரே costume  தான்!

* புழுதில புரண்டு புரண்டு வில்லன்களை புரட்டி எடுக்கனும்..படத்தோட கிளைமாக்ஸ்’ல வேட்டிய‌ கிழிச்சு விட்ருவாய்ங்க.. அழுதுக்கிடே போய் மல்லாக்க படுத்து மானத்தை காப்பாத்திக்கணும்.. 😉

* நக்கல் நையாண்டிக்கு படத்துல கொறச்சலே இருக்காது..என்ன? மனுசன் படம் எடுக்குற வேலையை மட்டும் பாத்துட்டு இருந்திருக்கலாம்.

டீ.குஜய ராஜேந்தர் படம்:

* ஒரு 40 வருட  இடைவெளியால இந்தியாவோட தேசத் தந்தை பட்டத்தை இழந்து நிற்க்கும் ஒரு அப்பாவி ஜீவன் இவரு தான்.. என்னங்க புரியலையா? 1980’ல இவரு ஆரம்பிச்ச தன்னோட கலை சேவைய கொஞ்சம் 1940 வாக்குல ஆரம்பிச்சிருந்தா இவர் படத்துல பேசுற English’அ பாத்து வெள்ளைக்காரன் அப்பவே ” புடிங்கடா நீங்களும் ஓங்க சுதந்திரமும்”னு கொடுத்துட்டு ஓடியே போயிருப்பான்! so, இந்த தேசத்துக்கு  சுதந்திரம் வாங்கித் தந்த பெருமை இவருக்கு சேந்து ,இவரும் தேசத் தந்தை ஆகியிருப்பாரு! 😉

இவரோட ஆங்கில மொழிப் புலமைக்கான ஒரு குட்டி Sample ! 🙂

* முண்டா பணியன போட்டு, அதை சட்டைக்குள்ள Tuck In பண்ணி விட்டு, தலை முடியை ஆட்டி ஆட்டி ” ஏய் ! டன்டநக்கா டனாக்குனக்கா னு ” இவரு ஆடுற ஆட்டத்தை பாக்க கண் கோடி வேண்டும்.

* இவரு இப்ப எந்த படமும் எடுக்காம இருக்குறததே கலைத்தாய்க்கு செய்யுற ஒரு பெரிய கலை சேவைதாங்க… 🙂

தமிழ்த் திரை இன்னும் கிழியும்…..

தொடரும்..  🙂

நட்பே நட்பே!


உலகத்திலே உன்னதமான உறவு நட்பு என்பார்கள். உணர்வுடன் சங்கமித்த ஒரு கருப்பொருளே நட்பு. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

து‌ன்ப‌ம் வரு‌ம் வேளை‌யி‌ல் கடவுளை ‌நினை‌க்‌கிறோம். அடுத்ததாக உத‌வி கே‌ட்க ந‌ல்ல ந‌ண்ப‌ர்களை‌ப் ப‌ற்‌றிய எ‌ண்ண‌ம் ந‌ம்மையு‌ம் அ‌றியாம‌ல் ந‌ம் மன‌தி‌ல் உதயமா‌கிறது.. பர‌ஸ்பர‌ம் அ‌ன்பை ம‌ட்டு‌ம் அ‌ல்லாம‌ல் து‌ன்ப‌த்தையு‌ம் ப‌கி‌ர்‌ந்து கொ‌ள்ளு‌ம் இ‌ந்த ஆ‌ற்ற‌ல் ந‌ட்பு‌க்கு ம‌‌ட்டுமே உ‌ரிய ‌சி‌ற‌ப்பா‌கிறது.

ஒ‌‌‌‌வ்வொரு ம‌னிதரு‌க்கு‌ம் அவருடைய வா‌ழ்‌க்கை‌யி‌ல் ந‌ம்பகமான ஆலோசக‌ர் தேவை‌ப்படு‌கிறா‌ர். மு‌க்‌கியமாக ந‌ண்ப‌ர்க‌ள் தேவை‌ப்படு‌கிறா‌ர்க‌ள். ஒருவருடைய ‌சி‌ந்தனைகளையு‌ம், குண‌ங்களையு‌ம் ப‌ட்டை‌ ‌தீ‌ட்ட, உத‌வி செ‌ய்ய அவரை ந‌ன்கு உண‌ர்‌ந்த ஒரு ந‌ண்ப‌ர் தேவை‌ப்படு‌கிறா‌ர்.

இந்த நன்னாளில், என் உயிரினும் மேலான என் நண்பர்களுக்கும், உலக மக்கள் அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்தை தெரிவித்துக் கொள்கிறேன்.


எனது இந்த 50வது பதிவு,

நண்பர்கள் தினத்தால் மேலும் சிறப்பான பதிவாக அமைந்ததில் மிகவும் மகிழ்ச்சி.


நண்பர்கள் தினத்தில் என்னை நான் மிகவும் ரசித்த ஒரு சில வரிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்..

“நண்பன் ஒருவன் வந்த பிறகு, விண்ணைத்தொடலாம் உண்டு சிறகு  வானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே…”

“ஊர் கூடி வந்தாலும் எதிர்க்குமே, உன் விழி துடிக்கையில் துடிக்குமே! உன் சோகம் இறக்கி வைக்க இறைவன் அனுப்பி வைத்த தோள்கள் தோழமையில் இருக்குமே”…

“கல்லூரி என்ன கொடுத்தது? கண் மூடி நினைத்தால் புரியுது! வெறும் கல்வி மட்டும் அல்ல, கனவு மட்டும் அல்ல, கண்கள் கலங்க வைக்கும் உறவுகள்!”

“எத்தனையோ குறும்புகள் செய்தோம்!
எத்தனையோ கனவுகள் நெய்தோம்!
எத்தனையோ காயங்கள் கண்டோம் தோழனே!
எத்தனையோ சண்டைகள் போட்டோம், எத்தனையோ வம்புகள் செய்தோம், எத்தனையோ பாடங்கள் கற்றோம்.. அத்தனையும் எந்நாளும் நெஞ்சுக்குள்ளே என்றும் இருக்கும்……”

எல்லையில்லா நட்பை போற்றுங்கள்… நண்பர்கள் தினத்தை  மகிழ்ச்சியோடு கொண்டாடுங்கள்..

அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!என்றும் நட்புடன்,
ஜோ. ராஜேஷ்

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார்!-இந்திய அரசியல் சட்டத்தின் தந்தை


“இந்திய அரசியல் சட்டத்தின் தந்தை” என்று போற்றப்படும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கார், தனது விடா முயற்சியாலும், உழைப்பாலும் எதிர்ப்புக்களை தவிடு பொடியாக்கி முன்னுக்கு வந்தவர்.

மராட்டிய மாநிலம் ரத்தினகிரி மாவட்டம் அம்பாவாடே என்ற கிராமத்தில் 14_4_1891_ல் பிறந்தார். தந்தை ராமாஜி மாலோஜி. தாய் பீமாபாய். ஏழைக் குடும்பமான இவர்களுக்கு 14 குழந்தைகள். கடைசிப் பிள்ளைதான் அம்பேத்கார். பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் பீமாராவ் ராம்ஜி. இவர்களது குடும்பம், மகார் என்ற தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தது.
அம்பேத்கார் கல்வி நிலையங்களில் அனுபவித்த கொடுமைகள் ஏராளம். உயர்ந்த சாதிப்பிள்ளைகளும், ஆசிரியர்களும் பள்ளி நிர்வாகமும் தாழ்ந்த சாதிப்பிள்ளைகளைக் கேவலமாக நடத்தினர். தாழ்ந்த சாதிப்பிள்ளைகள், உயர் சாதிப்பிள்ளைகளுடன் சேர்ந்து உட்காரக்கூடாது, உயர்சாதிப்பிள்ளைகளுடன் பேசக்கூடாது, தொடக்கூடாது என்று ஒதுக்கி வைத்தனர்.
இந்த அவமானத்தையெல்லாம் தாங்கிக்கொண்டு படிக்க வேண்டுமா என்றுகூட அம்பேத்கார் நினைத்தது உண்டு. ஆனால் அம்பேத்கார் என்ற அந்தன ஆசிரியர் ஒருவரின் அன்பும் அரவணைப்பும் அவர் எண்ணத்தை மாற்றின. தாழ்த்தப்பட்டவர்களும் மனிதர்களே. அவர்களையும் சமமாக மதித்து நடத்த வேண்டும் என்ற உயரிய கொள்கையுடைய அந்த ஆசிரியர், அம்பேத்கார் படித்து முன்னேற எல்லா உதவிகளையும் செய்தார். அவருடைய அன்புக்கு அடிமையான அம்பேத்கார், பீமாராவ் ராம்ஜி என்ற தன் பெயரை “அம்பேத்கார்” என்று மாற்றிக்கொண்டார். அன்று முதல் அவர் பெயர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கார் (பி.ஆர்.அம்பேத்கார்) என்று வழங்கப்படுகிறது.
14_வது வயதில் மெட்ரிகுலேஷன் படித்துத் தேறியதும், அம்பேத்காருக்கு அவர் தந்தை திருமணம் செய்து வைத்தார். மனைவி பெயர் ராமாபாய். பிறகு பம்பாய் கல்லூரியில் இண்டர் மீடியட் படித்து முடித்தார். அடுத்து பரோடா மன்னரின் உதவி பெற்று “பி.ஏ.” படித்துப் பட்டம் பெற்றார். பின்னர் பரோடா அரசின் படையில் சேர்ந்து பணியாற்றினார். அங்கும் மற்றவர்களால் தொல்லை. இடையில் தந்தை காலமாகி விடவே, வேலையை விட்டுவிட்டு பம்பாய் திரும்பினார்.
மேலும் மேலும் படிக்க விரும்பினார். ஆனால் பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை. மீண்டும் பரோடா மன்னரின் உதவி பெற்று 1913_ல் அமெரிக்கா சென்று கொலம்பியா பல்கலைக் கழகத்தில் படித்து எம்.ஏ. பட்டம் பெற்றார்.

பின்னர், பல சிரமங்களுக்கு இடையே லண்டன் சென்று படித்து, பொருளாதாரத்தில் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி “எம்.எஸ்சி” பட்டம் பெற்று பம்பாய் திரும்பினார். மேலும் படித்து “பாரிஸ்டர்” பட்டம் பெற்று வக்கீல் தொழிலில் ஈடுபட்டார். தாழ்த்தப்பட்டவர்களின் நலனுக்காக ஒரு சங்கத்தை நிறுவினார். தாழ்த்தப்பட்டோர் நலனுக்காக அல்லும் பகலும் பாடுபட்டார். அவருடைய சேவையைப் பாராட்டி பம்பாய் மாகாண கவர்னர், பம்பாய் மேல்_சபை உறுப்பினர் பதவியை அளித்தார்.

மாகாத்து என்ற நகரில் பொதுக்குளத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் நீர் எடுக்கக்கூடாது என்று கட்டுப்பாடு இருந்தது. அம்பேத்கார் அங்கு சென்று, இதைக் கண்டித்துப் பேசினார். அவரே குளத்தில் இறங்கி நீர் அருந்தினார். தாழ்த்தப்பட்ட மற்றவர்களும் நீர் அருந்தினர். பெரும் மோதல் ஏற்பட்டு, பிரச்சினை கோர்ட்டுக்குச் சென்றது. எல்லா மக்களும் நீர் எடுக்கலாம் என்று கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இது அம்பேத்காருக்கு கிடைத்த பெரிய வெற்றியாகும்.

காந்தியை பின்பற்றுபவராகத் தோன்றினாலும், கொள்கை அளவில் அம்பேத்காருக்கும், காந்திக்கும் கருத்து வேறுபாடு இருந்தது. அது பிறகு சமரசமாகத் தீர்ந்தது.
அம்பேத்காரின் மனைவி ராமாபாய் 27_5_1935 அன்று காலமானார். இதனால் பேரதிர்ச்சி அடைந்த அம்பேத்கார் வாழ்க்கையில் சலிப்படைந்தார். துறவி போல வாழ்ந்தார். பின்னர் “சுதந்திர தொழிலாளர் கட்சி” என்ற கட்சியை தொடங்கினார். அம்பேத்காரின் முயற்சியால், பல மாநிலங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சம உரிமை கிடைத்தது.

உயர்ந்த சாதியினரை உறுப்பினர்களாகக் கொண்டு இருந்த வைசிராய் நிர்வாக சபையில், அம்பேத்காரின் சேவையைப் பாராட்டி அவரும் ஒரு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அத்துடன் தொழிலாளர் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டு 3 ஆண்டுகள் பதவி வகித்தார். தொழிலாளர் முன்னேற்றத்துக்காக அரும் பணியாற்றினார்.
1946_ம் ஆண்டு டிசம்பர் 9_ந்தேதி, ராஜேந்திர பிரசாத் தலைமையில் அரசியல் நிர்ணயசபை செயல்படத்தொடங்கியது. அதில், சட்டம் இயற்றும் குழுவில் அம்பேத்காரும் நியமிக்கப்பட்டார். இந்தக் குழுவினர் இயற்றியதுதான் இந்திய அரசியல் சட்டம்.

சுதந்திர இந்தியாவின் பிரதமராக நேரு பொறுப்பு ஏற்றதும், அவரது மந்திரிசபையில் அம்பேத்கார் சட்ட அமைச்சராக இருந்து பணியாற்றினார். அரசியல் நிர்ணய சபையின் 3_வது கூட்டத்தில், தீண்டாமையை ஒழிக்க சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் அம்பேத்காரின் நீண்ட கால முயற்சி வெற்றி பெற்றது.
அம்பேத்கார், ஓயாமல் உழைத்ததால் உடல் நலம் குன்றி பம்பாய் மருத்துவமனையில் சேர்ந்தார். சாரதா அம்மையார் என்ற டாக்டரின் கனிவான சேவையால் அவர் குணம் அடைந்தார். அதைத்தொடர்ந்து அந்த அம்மையாரின் விருப்பத்துடன் அவரை மறுமணம் புரிந்து கொண்டார். இதன் மூலம் பிராமண வகுப்பைச் சேர்ந்த சாரதா அம்மையார், கலப்புத் திருமணத்திற்கு ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தார்.

நேரு மந்திரிசபையில் சட்ட மந்திரியாக பணியாற்றியபோது, மற்றவர்களுக்கும் அம்பேத்காருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மந்திரி பதவியை விட்டு விலகி எதிர்க்கட்சித் தலைவர் ஆனார்.

பல காரணங்களால் இந்து மதத்தின் மீது சலிப்பு அடைந்த அம்பேத்கார், 1956 அக்டோபர் மாதம் இந்து மதத்தை விட்டு, மனைவி சாரதா அம்மையாருடன் புத்த மதத்தைத் தழுவினார். பிறகு புத்த மதத்தைப் பரப்பும் முயற்சியில் தீவிரப் பங்கு கொண்டார்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தன் வாழ்நாளையே அர்ப்ப
ணித்த டாக்டர் அம்பேத்கார் 1956 டிசம்பர் 6_ந்தேதி காலமானார். 1990_ல் இந்தியாவின் உயர்ந்த விருதான “பாரத ரத்னா” விருது அவருக்கு (மறைவுக்குப்பின்) வழங்கப்பட்டது.

இதாங்க தமிழ் சினிமா!


1) போலிஸ் படத்துக்கு இடையிலே வரணும்ன்னா..

* ஹீரோ போலிஸ்-ஆ இருக்கணும்..

* ஹீரோயின் அப்பா போலிஸ்-ஆ இருக்கணும்..

* இல்லேன்னா ஹீரோ திருடனா இருக்கணும்..

2) ரெண்டு கதாநாயகி இருந்தா…

* ஒருத்தி வில்லன் குண்டுக்கோ, கத்திக்கோ க்ளைமாக்ஸ்-லே இரையாகணும்..

* வெளிநாட்டுக்கு போயிடணும்..

* இல்லேன்னா சாமியாரா/துறவியா/ கன்னியாஸ்திரீயா போயிடணும்.

3) ஹீரோ ரெட்டை வேடமா இருந்தா…

* ரெண்டு பேரும் அடிச்சுக்கற மாதிரி சண்டை காட்சி இருக்கணும்..

* ரெண்டு பேரும் கடைசியிலே வில்லனை வெளுக்கணும்..

* இல்லேன்னா அதிலே ஒருத்தன் புண்ணாக்கா இருக்கணும்..

4) ஹீரோவுக்கு தங்கச்சி இருந்தா…

* படம் ஆரம்பிச்சு 15 நிமிஷத்துலே கெட்டு போகணும்..

* வில்லனை தான் லவ் பண்ணனும்..

* எம்புருசன் என்னை அடிப்பார்..உதைப்பார்.. நீ யார் கேட்க அப்படின்னு கொட்டங்கச்சி பாட்டுக்கு லீட் கொடுக்கணும்.

5) காமெடியன்னு ஒருத்தன் இருந்தா…

* அடி வாங்கணும்..

* அடி கொடுக்கணும்..

* இல்லேன்னா தத்துவமோ, மூடனம்பிக்கை ஒழிப்பு பிரசாரமோ செய்யணும்..

6) ஹீரோவோ ஹீரோயினோ போலிஸ்-ஆ இருந்தா..

* கையிலே பிரம்பு வச்சிருக்கணும்..

* போஸ்டருக்கு போஸ் குடுக்கும் போது நம்ப கண்ண குத்தறது மாதிரி நீட்டி காட்டணும்..

* கட்டாயம் காமெடி பார்ட்டி ஏட்டாவோ கான்ஸ்டபிளாவோ இருக்கணும்.

7)வில்லன்’னு ஒருத்தன் இருந்தா…
*  கோட்,சூட் எல்லாம் போட்டுக்கிட்டு வாயிலயே சவுண்டு விட்டுக்கிட்டு அடி வங்குறது எல்லாம் அந்தக்காலம். வெள்ளை வேட்டி , வெள்ளை சட்டை போட்டு வந்து சத்தமே இல்லாம ஸ்லோ மோஷன்’ ல அடி வாங்கணும்.

* வெத்தலைக்கு சுண்ணாம்பு வாங்கணும்னா கூட பத்து பதினஞ்சு டாட்டா சுமோ’ல தான் போகணும்.

*  போட்டுருவேன்,ஓத்…. தூக்குடா அவனை,ஓம்… வாடா, போன்ற வார்த்தைகளை அடிக்கடி பேசணும்.

*  படம் பூராவும் 40 இல்ல 50 அடியாட்கள் வச்சிருந்தாலும், கிளைமாக்ஸ்’ ல ஒண்டியா நின்னு ஹீரோ கிட்ட அடி வாங்கி டிரவுசர  கிழீச்சுக்கணும்.

8) கதாநாயகனோ, கியோ வக்கீலா இருந்தா…

* அப்ஜெக்சன் யுவர் ஆனர்’னு..   சொன்னா நீதிபதி ஏத்துக்கணும்..

* எதிர் வக்கீல் மரண பாயிண்ட் சொன்னா கூட தள்ளுபடி செஞ்சுடணும்..

* இல்லேன்னா கோர்ட்லே முள்ளு உடஞ்ச கடிகாரம் இருக்கணும்.

9) கதாநாயகன் குள்ளமா இருந்தா..

* கூட ந்டிக்கிற கதாநாயகி உயரமா இருக்கணும்..

* ஹை ஹீல்ஸ் போட்டுக்கணும்..

* ஆனா பாட்டு சீன் பூரா முழங்கால் மடக்கிக்கிட்டே ஆடணும்.

10) கதாநாயகன் காலேஜ் மாணவனா இருந்தா..

* ப்ரின்சியோ, லெக்சரரோ காமெடியனாத்தான் இருக்கணும்..

* சக மாண்வர்களா ரெண்டு மூணு குட்டி காமெடியன்களும், வில்லனும் இருக்கணும்..

* கட்டாயம் கதாநாயகியை ராகிங் பண்ற மாதிரி பாட்டு இருக்கணும்.

11)தீவிரவாதியா இருந்தா….

*  இந்தியா’ ல மிலிட்டரி இருந்தாலும்  தமிழ்நாட்டுல சங்கரன்கோவில்ல இருந்து விஜயகாந்த்த தான் அனுப்பி வைப்பாங்க… டையலாக் பேசியே மனுசன் கொல்லுவாரு… அதை எல்லாம் தாங்கணும்..

* பார்லிமென்ட்டுக்கே குண்டு வெச்சிருந்தாலும், அர்ஜுனோட சைக்கிள் டயர் காத்த புடுங்கி விடும் போது மாட்டிக்கிட்டு அடி வாங்கணும்…

தொடரும்…..

வினோதமான வலைப்பூக்கள்..!விளையாட:

57 விதமான விளையாட்டுகளை கொண்டுள்ளது இந்த வலைத்தளம். ஒவ்வொரு விளையாட்டும் வெவ்வேறு விதமான லாஜிக்குகளைக் கொண்டது.

Orisinal வலைப்பூவிற்கு செல்ல…

http://www.ferryhalim.com/orisinal/

மிகச் சிறிய வலைப்பூ:

உலகிலேயே மிகச் சிறிய வலைப்பூ இது. ஒரு ஐகான் அளவே உள்ள இந்த வலைப்பூ, விளையாட்டை அடிப்படையாக கொண்டது.

வலைப்பூவிற்கு செல்ல http://www.guimp.com/

மிக நீளமான வலைப்பூ:
18.939 கிலோ மீட்டர் அதாவது 11.77 மைல் நீளமான வலைப்பூ இது. உலகின் மிக நீளமான வலைப்பூ இது .
வலைப்பூவிற்கு செல்ல http://worlds-highest-website.com/

வித்தியாசமான கூகுள் சர்ச்:
இந்த தளம் விதவிதமான கூகுள் தேடுபொறிக்கான தீம்களை பெற்றுள்ளது. நமக்கு பிடித்தமான ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். இது வித்தியாசமான அனுபவமாக இருக்கும்.

வலைப்பூவிற்கு செல்ல http://www.favoorit.com/#

சொடுக்காமல்
இந்த வலைப்பூவில் எந்த காரணத்திற்காகவும் சொடுக்க கூடாது. இப்படி உங்கள் மௌசை பயன்படுத்தாமல் மெயில் கூட அனுப்ப முடியும் என்கின்றார்கள்.

வலைப்பூவிற்கு செல்ல http://www.dontclick.it/

சிறந்த தளங்களை கண்டறிய உதவும் தேடுபொறி:
நீங்கள் கொடுக்கும் பிரிவில் சிறந்த பத்து தளங்களை வரிசைப் படுத்தி காட்டுகிறது.

வலைப்பூவிற்கு செல்ல http://www.topsite.com/

அனிமேசன்:
மிக அழகாக அனிமேசனுக்காக வடிவமைக்கப்பட்ட வலைப்பூ இது. இதன் நடுப்பகுதியில் ஓடிடும் உருவங்களை சொடுக்கிப் பாருங்கள். அதன் செய்கைகள் வினோதமாக இருக்கும்.
வலைப்பூவிற்கு செல்ல http://www.aardman.com/

ஆன்லைன் மியூசியம்:
மிக அரிய தளம் இது. உலகத்தில் இருக்கும் சிறந்த மியூசியங்களை இணையப்படுத்தி இருக்கின்றார்கள்.

குடும்பம்:
நமது குடும்பத்தினைப் பற்றியும் முற்கால சந்ததியினரைப் பற்றியும் வருங்கால சந்ததிகள் அறிந்து கொள்ள உதவும் தளம்.
வலைப்பூவிற்கு செல்ல…

2000 நகைச்சுவைகள்:
2000 நகைச்சுவை துணுக்குகளைக் கொண்ட வலைப்பூ இது.
வலைப்பூவிற்கு செல்ல http://www.jokes2000.com/

பணத்தினை மடிக்கும் கலை:
பணத்தினை வைத்துக் கொண்டு பல பொருள்கள் வாங்கிருப்பீர்கள்.என்றாவது மடித்து பார்த்து வித விதமாய் உருவங்களை உருவாக்கியிருக்கீர்களா. இந்த தளத்தைப் பார்த்த பின்பு கண்டிப்பாக நீங்கள் செய்து பார்ப்பீர்கள்.
வலைப்பூவிற்கு செல்ல http://www.foldmoney.com/
PhotoshopDisasters:
புகைப்படங்களை விளையாட்டிற்காக மாற்றம் செய்து வெளியிட்டுள்ளார்கள். கொஞ்சம் கூர்மையாக நோக்கினால் அவர்கள் செய்துள்ள குறும்புகள் தெரியவரும்.

வலைப்பூவிற்கு செல்ல http://photoshopdisasters.blogspot.com/