பெங்களூரு – மெத்தப் படித்திருக்கும் இளைஞர்களின் (குறிப்பாக தமிழ் இளைஞர்கள்) கனவு நகரம்.
பெங்களூருக்கு வந்து ஒரு வருசத்துக்கும் மேல ஆகிப்போச்சு. இதையெல்லாம் வாழ்க்கையில பாப்போமான்னு கனவுல மட்டுமே நினைச்சுட்டு இருந்த பல விஷயங்களை எல்லாம் சலிக்க சலிக்கப் படம் போட்டுக் காட்டுன இந்த ஊரைப் பத்தி ஏதாவது எழுதணும்ன்னு தோணுச்சு.அதோட விளைவு தான் இந்தப் பதிவு.
சரி! இனி பதிவுக்குள் …
ஓசூர்!
இந்த ஊரைக் கிராஸ் பண்ணும்போதே வயித்துல லைட்டா பட்டாம் பூச்சி பறக்கும்! (புது ஊரு,தெரியாத அட்ரெஸ்சை எப்படி டா கண்டுபுக்கப் போறோமுங்குற வவுத்து கலக்கல்ன்னு கூட சொல்லலாம்!) அடுத்த ஒரு மணி நேரத்துல பெங்களூரு!
வந்த புதிதில் எல்லாமே இடிகளாகத்தான் உச்சி மண்டையில் இறங்கும். சில இடிகள் அதிர்ச்சியானவை,சில இடிகள் சுவாரசியமும் ஆர்வம் கூட்டுபவையாவும் இருக்கும்.அவ்விடிகளை ஒவ்வொன்றாய் வரிசைப்படுத்துகிறேன்!
இடி – 1 : மடிவாலா,மடிவாலான்னு கண்டக்டர் பொடியன் சத்தம் போடும்போதே உசாரா எந்திரிச்சு உக்காந்துக்கணும்.இல்லனா அம்புட்டுதேன்..
பெங்களூருக்கு புதுசா வர்ற நம்ம பயலுகளுக்கு உச்சந்தலையில மொதோ இடியை இறக்குறது இந்த ஆட்டோக்காரவிங்கதான்! என்பது மீட்டர் தூரம் கூட ஆகாத அட்ரஸ்சுக்கு என்பது ரூவா கேட்டு அவன் பர்சுல வெடியை வெப்பாணுக.வேற வழியில்லாம அதுல ஏறிப்போயி,ஒரு வழியா அட்ரெஸ்சைக் கண்டுபுடிச்சி போய் சேர்ந்துடுவாணுக.
இடி – 2 : இத்தனை நாளா,நம்ம ஊருல சரவண பவன்,மாமி மெஸ்,
,முக்குல இருக்க தள்ளுவண்டிக் கடைகள்ல ரெண்டு இட்டிலிக்கு மூணு லிட்டர் சாம்பாரைக் குடிச்சுப் பழகியிருக்கலாம்.ஆனா,பெங்களூர் வந்ததும் நீங்க வெறுக்குற முதல் விஷயம் சாம்பாராத்தான் இருக்கும்.எப்படித்தான் இப்படி சாம்பாரை வைக்குறாய்ங்களோ தெரியல.(அந்த சாம்பாரையும் விடாம ஒருத்தன் வளைச்சுக் கட்டி அடிச்சா அவன் “கன்னடிகா” என்றறிக).
இடி – 3 : பஸ்ஸு போர்டை பாத்ததுமே வயித்தைக் கலக்கிரும்.போர்டுல என்னத்தை எழுதிருக்காய்ங்கன்னே தெரியாது.எல்லாம் நம்பரை வெச்சுதான் கண்டுபுடிசுக்கணும்.(இவ்விடத்தில் கன்னடர்களின் மொழிப்பற்றை வியந்தாக வேண்டும். பெரும்பாலான பேருந்தின் பலகைகளில் கன்னடத்தில் மட்டுமே எழுதியிருக்கிறார்கள்) டிக்கெட் ரேட்டுகளைப் பத்தி பேச எல்லாம் நமக்கு வக்கில்ல.சோ, அதை ஸ்கிப் பண்ணிடலாம்.
இடி – 4 : ஸ்லீவ்லெஸ் சுடிதாரைப் பாத்தாலே “டங்க்ஸ்ட்டன்” ஆகி பழகிப்போன நாம,பெங்களூர் பொண்ணுகளோட ட்ரெஸ் கோடுகளுக்கு(Dress Codes) செட் ஆக ரொம்ப நாளாகும்.லாஸ் ஆப் பே’ல (Loss of pay)லீவெல்லாம் போட்டு இதுக்குன்னே, எம்.ஜி ரோடு,கமர்சியல் ஸ்ட்ரீட்டு,மந்த்ரி மால், சென்ட்ரல், போரம்’ன்னு போயிட்டு வருவாய்ங்க!
இடி – 5 : மொழிப் பிரச்சினை .. அது இல்லாமலா?”கன்னடம்”…. தக்காளி,சைனீஸ் மொழியைக்கூட பேசி படிச்சு பழகிப் புடலாம் போல.ஆனா,கன்னடம் ம்ம்ஹூம். சாதரணமா, பஸ்ல கண்டக்டர் பேசுற கன்னடம் உங்களுக்கு புரிஞ்சிட்டாலே நீங்க பெரிய ஆளுதான்.
இடி – 6 : குடும்பத்தோட கல்லை கட்டிக்கிட்டு கிணத்துக்குள்ள கூட குதிச்சுடுங்க.ஆனா,இந்த ஊரு பார்க்குகளுக்கு மட்டும் புள்ளை குட்டிகளோட போக ப்ளான் போட்டுடாதீங்க.பெரும்பாலான இன்ஸ்டன்ட் காதல்களின் (Instant love) விரக தாபத்தை தீர்க்கும் படுக்கை அறைகளாக அவை மாறிப்போய் எப்போதோ புண்ணியம் தேடிக்கொண்டுவிட்டன.
இடி – 7 : பார்க்குகள்ல தான் அந்த அக்கப்போரு பண்ணுறாய்ங்கன்னா, எட்டு மணிக்கு மேல எந்த சந்துக்குள்ளையும் போக முடியாது! எல்லாம் செட்டு செட்டா நின்னு ரொமான்ஸ் பண்ணிட்டு இருப்பாய்ங்க.நம்ம பய இப்படி சீனை எல்லாம் மலையாள பிட்டுப் படத்துல மட்டுமே பாத்திருப்பான்.அந்த ஆர்வத்துல கொஞ்சம் எசகு பிசகா அவிங்களா என்னமாது (!!!) பண்ணிட்டா அம்புட்டுதான்,அந்தப்பையன் கூட கண்டுக்காம “காரியமே கர்ம்மமாக” இருப்பான்,ஆனா,அந்தப் புள்ளை சும்மா விடுமா? கன்னா பின்னான்னு கத்தி விட்டுரும்.அது என்ன மொழின்னு கண்டுபுடிக்கவே நமக்கு நாப்பது நாள் ஆகும்,என்ன திட்டுனான்னு புரிஞ்சு போயி கடுப்பாகி பத்து நாள் கழிச்சு,அதே இடத்துக்கு அவளைத் தேடிப்போனா அதே பொண்ணு,வேற பையனோட ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்கும்… அங்க டென்சன் ஆகாம யதார்த்தத்தை புரிஞ்சிகிட்டா,அங்கேயே நீங்க பாதி பெங்களூர்வாசி ஆகிட்டீங்கன்னு அர்த்தம்..
இடி – 8 : கொஞ்சம் வெள்ளையா இருந்துட்டா போதும்(அவ்வ்வ்வவ்வ்வ்வ்….
),அவிங்களே நம்மளை வடநாட்டுக்காரன்னு முடிவு பண்ணிருவாய்ங்க. வர்ற புதுசுல, பல “கித்துனா பனானா ஹை” களை கடக்க வேண்டியிருக்கும்.
இடி – 9 : ஒரு சில புள்ளைகளைப் பாத்தா, உங்களுக்கு எண்ணத்தா இம்பூட்டு வறுமைன்னு வாயை விட்டே கேட்டுடலாம் போல இருக்கும்? அப்படித்தான் கிழிச்சு விட்டு சுத்துமுங்க. அதுலயும் ஒரு சில வட நாட்டுப் புள்ளைய நாலு படி மேல போயி,நம்ம ராஜ்கிரண் மாதிரி டவுசரை மாட்டிகிட்டு டவ் சோப்பு (Dove soap) வாங்க வந்து நம்ம டவுசரைக் கழட்டிருவாளுக. நம்ம ஊரு புள்ளைகளை கேக்கவா வேணும்? ஸ்ஸ்ஸ்சப்பா..உங்க வீட்டு அலும்பா எங்க வீட்டு அலும்பா?!?!.. ஊருல இருந்தப்ப ஓட்டைக் கண்ணாடியும் இந்திரா காந்தி சுடிதாரையும் மாட்டிகிட்டு திரிஞ்சதுக இங்க வந்ததும், பாஸ்ட் ட்ராக் கண்ணாடி(Fast track coolers),டைட்ஸ் டி-சர்ட்,தெறிக்கிற மாதிரி ஜீன்சுன்னு அலப்பறை பண்ணி அல்லையை கட்ட விடுதுங்க. பயலுகளும் சளைச்சவனுக இல்ல! நண்பன் பலராமனோட இந்த ஒரு பதிவு போதும்.அவிங்களைப் பத்தி தெரிஞ்சிக்க!
இடி – 10 : M.E கெமிக்கல் இன்ஜீனியரிங்கே படிச்சிருந்தாலும் நமக்கென்னவோ தமிழையும்,இங்கிலீசையும் தவிர்த்து வேற ஏதாவது மொழினா வேர்த்துக் கொட்ட ஆரம்பிச்சிடும்.ஆனா,நாம தங்கியிருக்க பிளாட் ஓனரு மூணாவது பெயில் ஆகியிருப்பாரு.ஆனா, அழிஞ்சு போன ஹீப்ரு மொழியைத் தவிர எல்லாத்தையும் அவரு சரளமா பேசுறதைப் பாத்து நமக்கு பேக்குல/பிரன்ட்டுல எல்லாம் பயர் ஆகும். கேரட் ஜூஸ் குடிச்சு ஆத்திக்கணும்…
இடி – 11 : பஸ் ஸ்டாப்பு , டீக்கடைன்னு பொண்ணுங்க எல்லா இடத்துலையும் பசங்களுக்கு போட்டியா நின்னு தம் அடிக்குங்க.அதை, வாயைப் பொளந்துகிட்டு ஆச்சரியமாப் பாத்தா நீங்க இன்னும் பக்குவப் படலைன்னு அர்த்தம்.
இடி – 12 : பொட்டிக் கடையில கடலை மிட்டாயோ,முறுக்கோ வாங்கப் போறதை மத்தவங்க பாத்துருவாங்களோன்னு நீங்க பயந்து நின்னுட்டு இருக்க அதே சமயத்துல, பதினெட்டு வயசுப் பையன் ஒருத்தன் உங்க முன்னாடியே அதே பொட்டிக் கடையில காண்டம்(Condom) வாங்கிட்டுப் போவான்… நீங்க காண்டாகாம இருக்கணும்.
கொசுறு : எல்லாத்துக்கும் மேல பெங்களூர் வந்ததும் கந்து வட்டிக்காவது கடனை வாங்கி முதல் காரியமா நீங்க செய்ய வேண்டியது ரெண்டு விஷயம் இருக்கு.முதலாவது ஒரு ஜெர்க்இன்(Jerkins) வாங்குறது,ரெண்டாவது ஒரு பிளாக் கலர் கூலர்(Cooling Glass) வாங்குறது.முன்னது,பெங்களூர் குளிருக்கு,பின்னது,இந்த ஊர் பொண்ணுகளுக்கு.நீங்க யார் யாரையெல்லாம் எங்கெங்க பாக்குறீங்கன்னு யாருக்கும் தெரிஞ்சிடக்கூடாதுல்ல அதுக்குத்தான்..
இது ரொம்ப முக்கியமுங்க! ஏன்னா பெங்களூர் தான் பெண்களூர் ஆச்சே!!
இடி இன்னும் விழும்!











